திங்கள், ஜூன் 25

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்.  அதாவது, இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1996இல் வெளிவந்தபோதே, இந்தக் கருத்தை நீங்கள் சொல்லிவந்ததாக நீங்களே  கூறியுள்ளீர்கள்.

அதாவது உங்கள் ‘ நினைவுப் பிழை', ஏறத்தாழ பதினாறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்?

 மேலும், அன்னிய நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதுவர்கள் என்று 1996இலேயே உங்களுக்குத் தெரிந்திருக்குமானால், அப்படிப்பட்டவர்களின் நூலை வெளியிடக்கூடாது என்று என் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் நீங்கள் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?

உங்களது அப்பட்டமான,அபாண்டமான பொய் அம்பலப்பட்ட பிறகே, என்னிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

தோழர்கள் எஸ்.வி.ஆரும் வ.கீதாவும் எழுதிய ‘Towards a Non-Brahmin Movement:From Periyar to Iyoothee Thass' என்னும் நூல், அவர்கள் இருவரும் தமிழில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமே தவிர வேறு அல்ல என்று கூறியுள்ளதன் மூலம், அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைக்கூட நீங்கள் படித்ததில்லை என்பதை அம்பலப்படுத்திக் கொண்டீர்கள்.

தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் பற்றிய எனது மதிப்பீடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம். ஆனால், விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளிலிருந்தும் அதன் நோக்கங்களிலிருந்தும் இந்த இருவரையும் பிரித்துப் பார்க்க நான் மறுக்கிறேன். இது என் உரிமை; கடமை.

பெரியாரியம்,அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும், எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம், அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் எத்தனை அன்னிய நிதியில் திளைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் ஏதேனும் ‘ஆராய்ச்சி' செய்ததுண்டா?

 உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

பெ.சிவஞானம் (விடியல் சிவா)
கோவை,24.06.2012


24 கருத்துகள்:

  1. ஆர்.எஸ்.எஸ்.-சின் அமெரிக்க ஏஜெண்டுகளின் நிதியுதவியோடு அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் திராவிட இயக்கத்தையும் பெரியாரையும், அம்பேத்கரியத்தையும் அவதூறு செய்து எழுதுவது குறித்து ரெண்டு ’கீ’யை அழுத்தியிருப்பாரா, நாளொன்றுக்கு நாற்பது பிளாக் போஸ்ட் அளவுக்கு எழுதும் ஜெமோ? பெரியார் என்றதும் துடிக்கிறதா இந்துத்துவ கொடுக்கு?

    பதிலளிநீக்கு
  2. புத்தகத்தின் பெயரில் மட்டும்தான் நினைவுப்பிழை , WACC கிருத்துவ மதப்பரப்பு பன்னாட்டு ஏகாதியபத்திய நிறுவனத்தில் இருந்து மார்க்ஸிய பெரியாரிய வாதியான எஸ்வியார் ஏன் உதவி பெற்றார் ?

    விடியல் சிவாவிடமே இதற்கான பதிலையும் நீங்கள் எழுதிப்பெற்று இங்கே தரலாம் ?


    எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம் http://www.jeyamohan.in/?p=28404

    பதிலளிநீக்கு
  3. நிதியுதவி எதுவும் பெறவில்லை என்று எஸ்.வி.ஆர் தனது கடிதங்களில் தெளிவுபடுத்திவிட்டார். ஆயினும் மீண்டும் மீண்டும் அதேவகை குற்றச்சாட்டை ஜெயமோகன் வைக்கிறார் என்றால் அதை நிரூபிக்கச் சொல்லி நீங்கள் ஜெயமோகனைத்தான் கேட்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. என்னுடைய comment ஏன் வரவில்லை என அறிந்துகொள்ள விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பின்னர் எதற்காக WACC கிருத்துவ மதப்பரப்பு பன்னாட்டு ஏகாதியபத்திய நிறுவனத்திற்கு மார்க்ஸிய பெரியாரிய வாதியான எஸ்வியார் ஏன் நன்றி தெரிவிக்கிறார்?

    பதிலளிநீக்கு
  6. திரு.துரைவேல் அவர்களுக்கு, "பின்னர் எதற்காக WACC கிருத்துவ மதப்பரப்பு பன்னாட்டு ஏகாதியபத்திய நிறுவனத்திற்கு மார்க்ஸிய பெரியாரிய வாதியான எஸ்வியார் ஏன் நன்றி தெரிவிக்கிறார்?" என்கிற கமென்டை இப்போதுதான் பார்த்தேன். நிற்க. ஒருவருக்கு நன்றி தெரிவித்தாலே அது பணஉதவிக்காகத்தான் இருக்கும் என்பதை மட்டுமே ஜெயமோகன் அறிந்திருப்பார் போலும். தொகையின் அளவையெல்லாம் புலனாய்ந்து வைத்திருக்கிற ஜெயமோகன் அதை உடனடியாக வெளியிட்டால், என்னைப் போன்றவர்களுக்கும் உண்மை தெரியும். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதுதான் விசித்திரமாக இருக்கிறது... உதாரணமாக இந்த பிளாக் ஆரம்பித்து எழுதி வருகிறீர்கள்.. அதற்கு பிஜேபி பிரமுகர் ஒருவருக்கு நன்றி என்கிறீர்கள்.. நீரோ மார்க்ஸ்ட்டில் இருக்கிறீர்..முரணாக இருக்காதா... கேள்விகேட்பவர் கேட்க மாட்டார்களா...(அது கிடக்கட்டும்.. என்னுடைய முந்திய பின்னுட்டம் princesamaவுக்கு பதில் கொடுத்தது வரவில்லை.. ஏன் தெரியவில்லை..)

      நீக்கு
    2. T.Duraivel என்கிற பெயரில் நேற்று கேட்டவரும் KANTHANAAR என்ற பெயரில் இன்று கேட்பவரும் ஒருவர்தானா அல்லது இவ்விருவருக்கும் இருக்கும் கேள்வி ஒன்றுதானா? ஒரு நூலின் உருவாக்கத்திற்கு பலரும் உதவவேண்டியிருக்கலாம். அவர்களுக்கு நன்றி சொல்வது மரபு.

      நீக்கு
    3. அட அட... என்ன மரபு என்ன மரபு... இந்த மரபு தொல்லை தாங்கல... கிருத்துவதக்கு ஒரு மார்க்சியவாதி நன்றி.. விட்டால் நாளை புஸ்சுக்கு காரல்மார்கஸ் நன்றி தெரிவிப்பார் போல... அய்யா.. துரைவேல் யார் என்று தெரியாது... என்னை அவரும் ஒப்பிடுவது எனக்குப் பெருமையாக இருக்கலாம்.. அவரை அவமானப் படுத்துவது போல

      நீக்கு
  7. ***உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.**

    என்ன சார் இப்படியெல்லாம் மிகவும் கடுமையாக எழுதி இருக்கீங்க? :(

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.

    -வருண்!

    பதிலளிநீக்கு
  8. எழுத்துகள் கூர்மையான ஆயுதம் கோனது என்பதை உங்கள் எழுத்தில் கண்டு கொண்டேன் ..........பார்த்து பயன்படுத்துங்கள் எதிராளியின் உயிர் மிஞ்சட்டும்

    பதிலளிநீக்கு
  9. நான் கேட்ட கேள்வியை இன்னொருவரும் கேட்டதால் அவரும் நானும் ஒன்றா என்கிறீர்கள்.இந்த கெள்வி என்னைப்போன்று பலருக்கும் தோன்றத்த்டான் செய்யும். உதவி கொடுத்த இயக்கமும் உதவப்பட்ட நூலுக்கும் இடையே இருக்கும் தொடர்பு அத்தகையது. வடகிழக்கு எல்லை பிரச்சினை பற்றி எழுதப்படும் புத்த்கத்திற்கு சீனா உதவியளிப்பதைப்போன்றது. அல்லது ஈழப்பிரச்சினபற்றி ஒரு தமிழர் எழுதும் நூலுக்கு ராஜபக்க்ஷே உதவுவதிப்போன்றது என்றும் சொல்லலாம். எத்தகைய உதவி என்பதை தெரியப்படுத்துவதில் ஏஏபடும் தாமதம் ஏன் என்று தான் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  10. ஜெயமோகனுக்கு மட்டுமே தெரிந்த- வேறு யாருமே அறிந்திராத - ஆனால் ஜெமோ என விளித்து கேள்வி கேட்டுவிட்டு காணாமல் போய்விடுகிற மாயலோக வாசகர்கள் பலரில் ஒருவராக உங்களை நினைத்ததற்காக வருந்துகிறேன். "என்னுடைய comment ஏன் வரவில்லை என அறிந்துகொள்ள விழைகிறேன்." என்று நீங்களும் , அது கிடக்கட்டும்.. என்னுடைய முந்திய பின்னுட்டம் princesamaவுக்கு பதில் கொடுத்தது வரவில்லை.. ஏன் தெரியவில்லை..என்று கந்தனாரும் கேட்டதால் அப்படி நினைக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் பாருங்கள், நீங்கள் இருவர் அனுப்பியதுமே இப்போதுவரை வந்துசேரவில்லை என்பது விசித்திரமாகத்தான் இருக்கிறது. பாவம், நீங்கள் அனுப்பிய மெயில் வழிதெரியாமல் எங்கெல்லாம் முட்டிமுட்டி அலைகிறதோ, கவலையாக இருக்கிறது.

    சொந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ஒருவர் எழுதமுடியாது, கூலிக்கும் கையூட்டுக்கும்தான் எழுதமுடியும் என்பதுதான் உங்களது வாதம் என்றால், ஜெயமோகனுக்கு யார், எவ்வளவு கொடுத்தார்கள், கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? அவதூறைக் கிளப்பிவிட்டு ஏன் பதிலளிக்கவில்லை, அய்யய்ய்யோ தாமதமாகிறதே என்று பதைப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?

    விடியல் சிவாவும், சுதீர்செந்திலும், எஸ்விஆரும் பட்டியலிட்டு எழுப்பிய ஒரு கேள்விக்கும் இப்போதுவரை பதில்சொல்லாத இந்த அறவாதி , ஒருகணமும் தாமதியாது தன்னிடம் இருக்கின்ற ஆதாரங்களை வெளியிட்டு எஸ்விஆரை அம்பலப்படுத்தவேண்டும் என்று தான் நானும் கேட்கிறேன். இங்கே இத்தனை மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிற நீங்கள் 'எனக்கொரு உண்மைத் தெரிஞ்சாகணும்' என்று உண்மையின் ஊற்றுக்கண், ஒழுக்கத்தின் பிறப்பிடம் ஜெயமோகனுக்கு ஒரு மெயில் அனுப்பி கேட்டுச் சொல்லுங்கள் துரைவேல்.

    பதிலளிநீக்கு
  11. உங்களுடைய முதல் பத்தியின் நகைச்சுவை நான் எதிர்வினை அனுப்பியதை நீங்கள் நம்பாததாகவும் நான் பொய் சொல்லுவதாக நீங்கள் குறிப்பிடுவதாகவும் தோன்றுகிறது. நல்லது அதை விட்டுவிடுவோம். இந்து மதத்தின்பால் விமர்சனங்கள் நிரம்பிய நூலுக்கு கிறித்துவ மத நிறுவனம் எப்படி உதவியது ஏன் உதவியது என தெரிந்துகொள்வத் நூலின் நம்பகத்தன்மைக்கும் அதன் உண்மையான நோக்கத்தை அறிந்துகொள்ள எனக்கு அவசியம். அப்படி நூலாசிரியர் தெரிவிக்காத நேரத்தில் நான் அவரின் நேர்மையை சந்தேகிக்கவே செய்வேன். இதில் ஜெயமோகன் எங்கு வருகிறார்? அவரை நான் ஏன் கேட்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
  12. நல்லது. எஸ்.வி.ஆரின் கடிதங்களைப் படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. ***T.Duraivel என்கிற பெயரில் நேற்று கேட்டவரும் KANTHANAAR என்ற பெயரில் இன்று கேட்பவரும் ஒருவர்தானா***

    Anything is Possible. Jeyamohan has all kinds of "spies" and "mobsters". They come here to defend him. Usually they wont have a blog. I mean they will be just like T.Duraivel or Kandharvar and pretend like very genuine people and they dont care about JM at all. I met couple of them. After couple of couter-attacks they DISAPPEARED. Now they may show up in other forms.

    The funny part is, when JM himself has such "anonymous mobsters" for defending him with or without his knowledge, he talks about anonymous people in vinavu!!!

    In every article JM brings up some christian organization or about koran even if it is not warranted. He says that he has nothing to do with sinthusamaveli movie. We all have to beleive him. On the other hand if someone says that I did not get any money from such and such organizations, people those who worship him wont understand.

    Why should anyone believe JM's statement that he has nothing to do with sinthusamaveli and that he had been "framed"?

    There are some things we can not prove that we are innocent and your conscience would know the truth! "Retards" like Duraivel wont get it.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. I am not mobster as you mud- sling on my face... Myself my unknown friend duraivel ask only a simple question that too in tamil... in a simple tamil... But you people try to mislead the entire story by way of applying taar on my face saying mobster ..sinthu samaveli... etc... If you really want to debate on christian missionary fundings, we can go ahead on this issue... Or else you want to know who are the mobsters or sinthu samaveli... then that is an different issue...

      நீக்கு
  14. ***T.DuraivelJune 25, 2012 9:42 PM

    பின்னர் எதற்காக WACC கிருத்துவ மதப்பரப்பு பன்னாட்டு ஏகாதியபத்திய நிறுவனத்திற்கு மார்க்ஸிய பெரியாரிய வாதியான எஸ்வியார் ஏன் நன்றி தெரிவிக்கிறார்?***

    ***If you really want to debate on christian missionary fundings, we can go ahead on this issue..***

    Here is something for you TWO!

    ///கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.///

    Now tell me WHAT JM says here? தமிழ்ல சொல்றேன், ஜெயமோஹன் என்ன சொல்ல வர்றார் இங்கே???

    He claims that mentioning WACC in the acknowledgement would help the book to be available to foreign university libraries. Meaning it would reach more foreign audience.

    It also means, it is not the MONEY here which made SVR to acknowledge WACC. It is about reaching MORE people.

    அதைத்தான் மேதாவி ஜெயமோஹன் இங்கே இப்படிச்சொல்லிப் பிதற்றுகிறார்.

    தேவையில்லாத குற்றச்சாட்டை வைத்த ஜெயமோஹனுக்கு ஒருவேளை தான் சொன்னது தவறாகிவிடுமோ என்ற பயத்தில் இதை இப்போ சேர்த்து சொல்லுகிறார்.

    உங்களுடைய குற்றச்சாட்டுகளும், அதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கங்களும், கண் தெரியாதவன் யானையைத் தடவி அதன் வடிவை விளக்கியது போலதான் இருக்கு...

    You have nothing concrete! All you have is "imagination" which I would call as "garbage"!

    BTW: kanthanaar, your profile says nothing but you are an anonymous guy, who could be a "web mosbster" too. Dont expect too much respect for this profile. If you do, update your profile with more details about your credentials and achievements and awards you received for your HONESTY. Not just "about me" garbage! Thanks.

    பதிலளிநீக்கு
  15. WACCயால் மட்டுமே உங்கள் புத்தகத்தை எண்ணத்தை உலகெங்கும்
    கொண்டு செல்லும் என்று எனது சிறு மூளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது..
    விடாப்படியாக அதுதான் ஒரே வழி என்றால் அப்படிச் சொல்பவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,
    ஆக இருக்க வேண்டும் அல்லது வேறு லிங்க் தேவை இருக்கும்.. அது
    நியாயமானது அவரவர் தேவையைப் பொருத்தது.. அதனுள் செல்லமுடியாது..
    நிற்க . I thought you are an English guy... தமிழில் சொல்கிறேன்
    நான் தங்களைப் போல கணினி எந்நேரமும் உடையவன் அல்லன்.. என்னுடைய மெயில் ஐடி
    கிராக் ஆகிவிட்டது.. சரி செய்ய முடியாத சூழல் அதுதான் காரணம்
    I do not have any sort of achievements since I am a simple man unlike you.....
    I have to work for my daily bread... By the way, I dont need
    your so called respect.. you have it yourself. You call anything garbage... I dont mind...
    at the same time you do not have the right of restricting others - since you speak in english.. ID என்பது சாதாரண விசயம் .. ஆனால் ஒவ்வொரு ID யில் நுழைந்து அவரவர் யார் என்பதைப் பார்க்க உமக்கு இருக்கும் அந்த
    துப்பறியும் ஆவல், ஒருவர் ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதற்கு ஒரு நிறுவனத்துக்கு நன்றி என ஏன் போடுகிறார் என்பதை அறியும் ஆவல் இருக்கக் கூடாதா... என்னே உமது அறம்...

    பதிலளிநீக்கு
  16. ****KANTHANAARJune 30, 2012 3:57 PM
    WACCயால் மட்டுமே உங்கள் புத்தகத்தை எண்ணத்தை உலகெங்கும்
    கொண்டு செல்லும் என்று எனது சிறு மூளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது..
    விடாப்படியாக அதுதான் ஒரே வழி என்றால் அப்படிச் சொல்பவர் ,,,,,,,,,,,,,,,,,,,,,
    ஆக இருக்க வேண்டும் அல்லது வேறு லிங்க் தேவை இருக்கும்.. அது
    நியாயமானது அவரவர் தேவையைப் பொருத்தது..***

    -----------------------------
    ///கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.///

    கந்தனார்

    மேலே உள்ளதை சொன்னது செயமோஹன்ந்தான். அவருடைய மூளை பெருசா சின்னதானு எனக்குத்தெரியாது. ஆனால் சொல்ல வர்ரது இதுதான்.

    --------------------

    ***ஒருவர் ஒரு புத்தகம் எழுதிவிட்டு அதற்கு ஒரு நிறுவனத்துக்கு நன்றி என ஏன் போடுகிறார் என்பதை அறியும் ஆவல் இருக்கக் கூடாதா... என்னே உமது அறம்..*****

    உதவிக்காக நன்றி சொல்லுவாங்க. அந்த உதவி பணம்தான்னு ஆதாரமில்லாமல் நம்புவது தவறு, அறமல்ல.

    If you keep saying that he received a cheque from WACC, you should provide us with a "copy" of the cheque. You should NOT accuse people without proper evidences. அது அறமல்ல! கீழ்த்தரமான செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheque அப்படின்னா என்ன எப்படி இருக்கும்னு கூட தெரியாத என்னைப் போன்றவர்களிடம் If you keep saying that he received a cheque என்றால்... அந்த மாதிரியா நான் சொன்னேன்.. அட கடவுளே... தலையே சுத்துகிறது...என்னைப் போன்ற பிச்சைக்காரனிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது.. நான் ஒரு அன்னாடங்காய்ச்சி... ஒரு குருடனைப் போய் ராஜ முழி முழிக்கச் சொல்கிறீர்.. செயமோகனுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.. செயமோகனிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பது அடாத செயல்...அவரிடம் கேட்பது உங்கள் உரிமை.. நான் அம்பேல்.....

      நீக்கு
  17. எந்தக் கட்டுரை எழுதினாலும் ஜெ.மோ. கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ ஸ்தாபனங்களுக்கு எதிராக ஏதாவது விஷமத்தனமானக் கருத்தை நுழைப்பது வழக்கம். ஜெ.மோ. மற்றும் அவரின் கைத்தடிகளின் லாஜிக்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் காசு வாங்கிக்கொண்டுதான் இப்படியெல்லாம் எழுதுகிறாரா?

    பதிலளிநீக்கு
  18. ***அட கடவுளே... தலையே சுத்துகிறது...என்னைப் போன்ற பிச்சைக்காரனிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது.. நான் ஒரு அன்னாடங்காய்ச்சி...***

    எனக்குத்தான் இப்போ தலை சுத்துது.

    நீங்க பிச்சைக்காரரா? இல்லை அன்னாடங்காச்சியா?

    குழப்பாதீங்க என்னை. எனக்குத் தெரிந்தவரை ரெண்டுபேரும் வேற வேற வகை. அதாவது அன்னாடங்காச்சி எல்லாம் பிச்சைக்காரர்கள் இல்லை.
    குளிர்சாதனப் பெட்டியிலே ஒரு வாரத்துக்கு சமைத்து வைத்து அதை அன்றாடம் எடுத்து சாப்பிடுற என்னைவிட சுயமரியாதை இழக்காமல் உழைத்து சம்பாரிச்சு அன்னாடங்காச்சி சாப்பிடுறவங்க எல்லாம் எவ்வளவோ உயர்ந்தவர்கள். ஆனா, நீங்க முன்னுக்குப் பின் முரணாகப் பேசுறீங்க! இல்லை அன்னாடம் காய்ச்ச பணம் இல்லைனா பிச்சை எடுப்பீங்களானு தெரியலை. எப்படியோ இருந்துட்டுப்போங்க. அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை!

    விவாத களத்தில் பிச்சைக்காரர்களும் செல்வந்தர்களும் சமமே!

    ஆக, உங்களுக்கு செக் அல்லது காசோலைனா என்னனு தெரியாது? ஆனால் WACC க்கு விரிவாக்கம் தெரியும், எஸ் வி ஆர்க்கும், WACC க்கும் உள்ள உறவு மட்டும் தெரியும்! அப்புறம் கேக்க மறந்துட்டேன் எஸ் வி ஆரிடம் WACC யு எஸ் டாலர்களையும், யு கே ஸ்டெர்லிங் பவுண்ட்ஸையும் பணமாக, ஒரு சூட்கேஸில் வைத்துக் கொடுக்கும்போது எடுத்த புகைப்படம் எதுவும் இருக்கா? அதுவும் இல்லையா? அப்போ, உங்களுக்கு ஏன் பெரியவரே இந்த ஆராய்ச்சி எல்லாம்? விட்டுடுங்கோ!

    செயமோகனிடம் என்னத்தை கேக்க சொல்றீங்க?

    அடிக்கடி அவரு எதையாவது ஒளறிக்கிட்டேதான் இருக்காரு. "மாரியாத்தாவுக்கும் சமஸ்கிரதம் சொல்லிக்கொடுக்கனும்"னு உளறியபோதும், அதுக்கப்புறம் "தேங்காயை வச்சு சூலத்தில் குத்தி, நிலநடுக்கத்தை நிறுத்திப்புடலாம்" னு உளறும்போதும், நான் ஏன்யா உளறுகிறீர்?னு அவர் தளத்தில் இல்லை, என் தளத்தில் கேட்டுக்கிட்டேதான் இருக்கேன்.

    அங்கே எல்லாம் என்னால நுழைய முடியாது. நுழைந்தாலும் கேள்வி கேட்க முடியாது! ஆமாங்க நான் எல்லாம் "தீண்டத்தகாதவன்". அவரு இந்துக்களில் உயர்ச்சதியான பிள்ள்ளைமாராம்! ஹிந்து தர்மத்தையும், வர்ணசாஸ்திரத்தையும் கேவலப்படுத்தும் என்னை எல்லாம் எப்படி அவரு தளத்திற்குள்ளே விட்டு கேள்விகேக்க விடுவாரு? அப்ப்டியே விட்டாலும், என்னால, "அன்புள்ள செயமோஹன் அவர்களே!, நீங்க ஒரு மேதை, நீங்க சொல்றதெல்லாம் உண்மை, உங்க தளத்தில் உள்ள அத்தனை பதிவுகளும் அருமையானவை"னு நாலுவரி எழுதி, நான் கேள்வியைக்கேக்கிறதுக்குள்ளே எனக்கு கேக்க வந்த கேள்வி மறந்துபோயிடுது...

    ***நான் அம்பேல்.....***

    நன்றி! :)

    பதிலளிநீக்கு
  19. http://ndpfront.com/tamil/index.php/articles/articles/guest/1342-2012-07-31-07-31-21
    //
    இதேபோலவே ஜெயமோகன் எஸ்விஆர் க்கு மேல் சுமத்திய குற்றச்சாட்டை - தோழர் சிவாவுக்குத் தெரியாமலே - அவரது பெயரில் பதில் எழுதினார் எஸ்விஆர். இரண்டாவது முறையும் எஸ்விஆர் எழுதிய பதில் கடிதத்தில் சிவாவின் மரணப்படுக்கையை சென்ரிமென்ற் பாணியில் பாவித்திருந்தார். இந்த முறைகேடு சிவாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது சிவா வருத்தமடைந்தார்.
    விடியல் சிவா மரணம் - ஒரு நினைவுக் குறிப்பு »
    //
    இது உண்மைதானா என்ற சந்தேகத்தை எங்கு கேட்பது ஜெயமோகனிடமா?

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...